தொலைநோக்குப்பார்வை
கல்வியே ஒருவருடைய நிலையான செல்வம். கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயம் மேம்பாடு அடையும். சிறந்த கல்வியை தொழில்நுட்பத்தின் வாயிலாக, எளிமையான வடிவில் அனைவரிடமும் சென்று சேர்ப்பதே எங்களின் தலையாய நோக்கம்.
செயல்திட்டம்
இந்தக் இணையதளமானது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை முழுமையாகவும், எளிய வடிவிலும் அவர்களுக்கு சென்றுசேர்ப்பதே எங்களின் இலக்கு. அதனை நிறைவு செய்ய, தொழில் நுட்பங்களின் உதவியுடன், சிறந்த எடுத்துக்காட்டுகளோடு பாடங்கள் காணொளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தரமான கல்வியை எளிதாக அனைவரும் பெறவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
தொடக்கம்

அமர்திரு வில்லூர் கிருஷ்ணன் ராமஸ்வாமி அய்யங்கார்,
அமர்திருமதி செல்லம்மாள் தம்பதியினர் ஞாபகார்த்தமாக
இவ்வறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம்
நட்டல், பின்னர் உள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி
ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் – மஹாகவி பாரதியார்.
ரா.கிருஷ்ணன்
நிர்வாக அறங்காவலர்.
ஜனவரி 31, 2020.
